Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கும் சிம்புவுக்கும் பிரச்சனையா….? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.

இந்த படம் தாமதமாக ரிலீஸ் ஆனதால் இயக்குனர் பாண்டியராஜுக்கும் நடிகர் சிம்புவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. பொதுவாகவே சிம்பு படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவார். கதைகளில் தலையிடுவார் என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படும். ஆனால் தற்போது தன்னுடைய வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல் இருக்கிறார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் பாண்டிராஜ் தனக்கும் சிம்புவுக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை எனவும், இது நம்ம ஆளு திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு தயாரிப்பு பக்கம் தான் காரணம் எனவும் சிம்பு காரணம் இல்லை. நாங்கள் 2 பேரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம் என்றார்.

Categories

Tech |