Categories
இந்திய சினிமா சினிமா

எனக்கும் திறமை உள்ளது… நிரூபித்த ஏ.ஆர் ரகுமான் மகள் – வைரலாகும் வீடியோ காட்சிகள்

ஏ.ஆர் ரகுமான் தனது மகள் இசையமைத்த வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது இந்திய திரையுலகினர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூலை 24ஆம் தேதி அவரின் இறுதி திரைப்படமான தில் பெச்சாரா நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக டைட்டில் பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. எனவே பிரபலங்களும் ரசிகர்களும் சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் டைட்டில் பாடலை பாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/CCoAjjeATCE/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

 

அந்தவகையில் ஏ.ஆர் ரகுமான் அவர்களின் மகள்  ரஹீமாரகுமான் கீ போர்டில் அந்த பாடலை வாசிக்கும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஏ.ஆர் ரகுமான் அவருகளுக்கு கதீஜா,ரஹீமா என இரு மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளார். ‘எந்திரன்’ படத்தில் இடம் பெற்றுள்ள புதிய மனிதா என்ற பாடலை கதீஜா பாடியுள்ளார். மேலும் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம்பெற்ற மவுலா வா சலீம் என்ற பாடலை அமீன் பாடினார். எனவே ரஹீமா தனக்கும்  இசை மீது ஆர்வம் இருப்பதை  தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |