Categories
தேசிய செய்திகள்

“எனக்கும் பசிக்கும்ல”…. திருட சென்றவர் செய்த காரியத்தை பாருங்க…..!!!!

அசாம் மாநிலத்தின் ஹெங்ராபுரி பகுதியில் ஜனவரி 8ஆம் தேதி நள்ளிரவு ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை ஆட்டையப் போட்டிருக்கிறார். அப்போது அவருக்கு பசிக்க ஆரம்பிக்க கிச்சனுக்குள் சென்று கிச்சடி சமைத்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து பூட்டிய வீட்டில் இருந்து சத்தம் வருவதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து உஷாராகியிருக்கிறார்கள். மக்கள் எல்லாம் உஷாராணதை பார்த்த திருடன் எஸ்கேப் ஆக முயற்சி செய்துள்ளார்.

அப்போது அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தில், கிச்சடி உடல் நலத்திற்கு நல்லதுதான். ஆனால் திருட்டு வேலையில் ஈடுபடும்போது வாழ்வுக்கே தீங்கு விளைவிக்கும் என கேலியாக பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கைதான திருடனுக்கு போலீசார் ஹாட் மீல்ஸ் வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |