Categories
சினிமா

எனக்கும் பாலியல் தொல்லை நடந்தது…. நடிகை சோனா….!!!

சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பலரும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் பாலியல் தொல்லைகள் குறித்த செய்தி வரும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் இதனைப் போலவே பாலியல் தொல்லை நடந்தது என நடிகை சோனா தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லைகள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. உங்களுக்கு நடந்தால் உடனே வெளிப்படுத்துங்கள். உரிமைக்கு குரல் கொடுங்கள். எதுவும் நடக்கவில்லை எனில் கடந்து செல்லுங்கள். வாழ்க்கை பெரியது என கூறியுள்ளார்.

Categories

Tech |