Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எனக்கும் மொபைல் போன் வேணும்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மொபைல் வாங்கித் தர மறுத்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூட்டேற்றி தொழிகோடு என்னும் பகுதியில் ஐயப்பன் என்பவர் தனது 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது 2-ஆவது மகளான வீணா என்பவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது ஐயப்பன் தனது மூத்த மகளான ஆராதிக்கு கைப்பேசி வாங்கி கொடுத்துள்ளார். இதனை கண்ட வீணா தனக்கும் கைப்பேசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ஐயப்பன் வீணாவிடம் அவர் 12-ஆம் வகுப்பு முடித்த பிறகு வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

இதனால் வீணா மனமுடைந்து வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து அருந்தியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து வீணாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வீணாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |