பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். அண்மையில் டில்லியில் 17 வயது மாணவி ஒருவர் சாலையில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார். இதுகுறித்து தற்போது கங்கனா ரணாவத் பதிவிட்டு இருப்பதாவது “சாலையோர ரோமியோ ஒருவரால் டீனேஜ் பருவத்தில் எனது சகோதரி ரங்கோலி ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானார். அதில் இருந்து அவர் மீண்டுவர 52 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது.
இதனால் என் குடும்பம் கடும் வேதனைக்கு உள்ளானது. அந்த சம்பவத்துக்கு பின் என்னை யாராவது கடந்து சென்றால் என் மீதும் ஆசிட் வீசுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக யாரேனும் முகம் தெரியாத நபர்கள் என்னை கடந்து சென்றால் முகத்தை மூடிக்கொள்வேன். இது போன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆகவே இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கங்கனா தெரிவித்துள்ளார்..