Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அதை வாங்கணும்னு விருப்பமில்லை”…. நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஸ்பீச்…..!!!!!

அஜித் நடித்த வாலி, விஜய்-ன் குஷி போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமாகிய எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். இப்போது அவருக்கு பல்வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரம் குவிகிறது. அண்மையில் வெளியான மாநாடு, டான் ஆகிய படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அத்துடன் இவர் கைவசம் இப்போது பொம்மை, மார்க் ஆண்டனி மற்றும் ஆர்சி 15 திரைப்படங்கள் இருக்கிறது.

அதன்பின் இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் “வதந்தி” எனும் புது வெப்தொடரில் நடித்து உள்ளார். புஷ்கர் – காயத்ரி தயாரித்து இருக்கும் இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் வதந்தி படக்குழுவினர் பேட்டி அளித்தனர். அப்போது வதந்தி திரைப்படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.

இதையடுத்து எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது “போய் சேரவேண்டிய இடம் நூறு எனில் நான் 15 கி.மீ மட்டுமே கடந்து இருக்கிறேன். தனக்கு ஆஸ்கர் விருது மற்றும் தேசிய விருது வாங்குவதில் விருப்பமில்லை. ஆனால் எஸ்.ஜே.சூர்யா நடித்தால் அதனை உடனே பார்க்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கவேண்டும். அந்த அன்பை மக்களிடம் இருந்து வாங்கவேண்டும்” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |