Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் இருக்கு”….. நடிகர் அசோக் செல்வன் ஸ்பீச்…..!!!!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவரான அசோக்செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியாகிய “நித்தம் ஒரு வானம்” படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இவர் கிராமத்து கதையிலும் வில்லனாகவும் நடிக்க விரும்புகிறார். இது தொடர்பாக அசோக்செல்வன் பேட்டி அளித்ததாவது “நான் சினிமா பின்புலம் இன்றி திரைத்துறைக்கு வந்து நிறைய கஷ்டப்பட்டுள்ளேன்.

திரையுலகிற்கு வரும் அனைவருமே கஷ்டப்பட்டுதான் வருகின்றனர். நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அவ்வாறு தான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். இதனிடையில் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் 3 பாத்திரங்கள் என்று நினைத்துதான் செய்தேன்.

தற்போது அதற்கு வரும் பாராட்டுகள் மனதிற்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அத்துடன் அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் பல படங்கள் செய்யவுள்ளேன். எனக்கு கிராமத்துகதையில் நடிக்க வேண்டுமென ஆசை உள்ளது. ஆகவே கூடியவிரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம். மேலும் எனக்கு சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஆர்வம் இருக்கிறது. அதற்குரிய கதையை எதிர்பார்க்கிறேன்” என்று அவர் பேசினார்.

Categories

Tech |