Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எனக்கு அமைச்சரை தெரியும்… ரூ.8½ லட்சம் கொடுங்க…. உங்களுக்கு ஆசிரியர் வேலை… ஏமாற்றிய நபரை தூக்கிய போலீஸ்..!!

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 1/2 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறை ரெயிலடி மேல ஒத்தசரகு தெருவில் வசித்து வருபவர்கள்  விஜயகுமார்- வெற்றிச்செல்வி தம்பதியினர். இவர்களிடம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரோடு காந்தி நகரை சேர்ந்த 37 வயதான முருகன் என்பவர் கடந்த ஆண்டு 2021, ஜூலை மாதம், நான்  தனியார் வங்கி மேலாளராக பணிபுரிவதாகவும்  தற்போது பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறைக்கு வந்துஇருக்கிறேன் என்றும்  கூறி வீடு வாடகைக்கு கேட்டுள்ளார். உடனே வெற்றி செல்வி தனது வீட்டின் மேல் பகுதியை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

வீட்டின் மாடியில் குடியிருந்த முருகன் இந்த தம்பதியினரிடம் நன்றாக பேசி பழகினார். அதன்பின் நிறைய அமைச்சர்களிடம் பழக்கம் இருப்பதாகவும் வெற்றி செல்விக்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி 8 1/2 லட்ச ரூபாய் பணத்தை முருகன் இவர்களிடம் இருந்து வாங்கியுள்ளார். இதையடுத்து ஆசிரியர் வேலை வாங்குவதற்காக அமைச்சரிடம் கடிதம் வாங்க வேண்டும் என்று கூறி விஜயகுமாரை முருகன்  அழைத்துச் சென்றுள்ளார்.

திருச்சி சென்றவுடன் காரிலே உட்காருங்கள் என்று விஜயகுமாரிடம் சொல்லிவிட்டு சென்ற முருகன் திரும்ப வரவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் முருகனை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெற்றிச்செல்வி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து முருகனை வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமேஷ், நரசிம்ம பாரதி உட்பட தனிப்படை காவல்துறையினர் உடுமலைப்பேட்டையில் தலைமறைவாக இருந்த முருகனை பிடித்துள்ளனர். அவரிடம் விசாரித்த போது ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து முருகனை காவல்துறையினர் கைது செய்து நேற்று மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |