சினிமாவில் கலரான நடிகைகள் தான் ரசிகர்களை கவர முடியும் எனும் எண்ணத்தை மாற்றிய பிரபல நடிகை பிரியாமணி அண்மைகாலமாக தமிழ் படங்களில் தலை காட்டாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கிராமத்து திமிர்பிடித்த கதாபாத்திரங்களில் இவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அளவிற்கு தன் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். அதுமட்டுமல்லாமல் அந்தப் படத்தில் நடிகரை விட, நடிகை தான் நடிப்பில் மிரட்டி அனைவரது பாராட்டையும் பெற்றார். தன் திறமையான நடிப்புக்காக பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். திருமணம் முடிந்த பின் சிறிது காலம் நடிக்காமல் இருந்த பிரியாமணி மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தமிழில் சரியான படவாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. அத்துடன் தமிழில் அவர் நடித்த படங்களும் சரியாக போகவில்லை. இதன் காரணமாக தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். எனினும் தமிழ் படங்களில் நடிக்காதது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய அறம் படம் தனக்கு பிடித்த படம் என்று பிரியாமணி தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் மதிவதனி என்ற கதாபாத்திரத்தில் கலெக்டராக நயன்தாரா நடித்திருந்தார். இதில் அவருடைய துணிச்சலான நடிப்புக்காக பல பேரது பாராட்டையும் பெற்றார். இந்த நிலையில் அது மாதிரி ஹீரோயினிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை கேட்டு வருகிறேன். அது மாதிரியான கதாபாத்திரம் கிடைத்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று பிரியாமணி உறுதி அளித்துள்ளார். இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் பிரியாமணியை தமிழ் படங்களில் பார்ப்பதற்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.