தமிழ் சினிமா திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ். இவர் 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடாபோடி படத்தின் மூலமாக இயக்குனராகிள்ளார். முதல் படமே பெரிய ஹீரோவின் படம் என்றாலும் போடா போடி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பின் நானும் ரவுடிதான் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் விக்னேஷ் சிவனின் திரை வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இந்த படத்தின் போது காதல் மலர்ந்தது. இந்த நிலையில் கடந்த 7 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்பதுதான் பல பேரின் கேள்வியாக இருக்கின்றது.
சமீபத்தில் நானும் ரவுடிதான் படத்தின் வெற்றிக் கூட்டணியாக விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற்று வெற்றி படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலை விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் உறுதி செய்யவும் இல்லை. அதே நேரம் மறுக்கவும் இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் பங்கேற்ற விக்னேஷிவனிடம் தொகுப்பாளி பிரியங்கா திருமணம் பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு விக்னேஷ் சிவன் விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரியங்கா எனக்கு அழைப்பு விடுப்பீர்களா என கேட்டுள்ளார். அதற்கு முதல் பத்திரிக்கை உங்களுக்கு தான் என விக்னேஷ் சிவன் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.