இந்திய அணியின் முக்கிய டி20 உலகக் கோப்பை 2022 அணியில் இருந்து இவர்கள் இருவரும் நீக்கப்பட்டது ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்..
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.. இந்த டி20 அணியில் கிட்டத்தட்ட ஆசிய கோப்பை தொடரில் ஆடிய வீரர்களே பெரும்பாலானோர் இடம்பெற்றனர்.. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோரும், ஆல்ரவுண்டராக தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் ஆகியோர் இடம்பிடித்தனர். அதேபோல சுழற் பந்துவீச்சில் தமிழக வீரர் ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும், வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. மேலும் காத்திருப்பு வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த டி20 அணி குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய டி20 உலகக் கோப்பை 2022 அணியில் இருந்து பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டது ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தீபக் ஹூடாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் மற்றும் ஹர்ஷல் படேலுக்குப் பதிலாக ஷமி ஆகியோர் எனது தேர்வாக இருப்பார்கள்,” என்று கூறினார்.
Shreyas Iyer instead of Deepak Hooda and Md. Shami in the place of Harshal Patel would be my choice.
— Mohammed Azharuddin (@azharflicks) September 12, 2022