நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே காதணி விழாவிற்கு தம்பி வீட்டில் இருந்து முறைப்படி அழைப்பிதழ் வழங்காததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அண்ணாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பி குழந்தைக்கு காதணி விழா நடந்தது. இதற்காக அவருடைய தம்பி அழைப்பிதழ் அச்சடித்து இருந்தார். அந்த அழைப்பிதழில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் பெயர் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஜெயலட்சுமிக்கு அழைப்பிதழை நேரில் வழங்காமல் தபாலில் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஜெயலட்சுமி மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள முந்திரி தோப்புக்கு சென்று ஜெயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாய்மேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறைப்படி காதணி விழாவிற்கு அழைப்பிதழ் வழங்காததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.