தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதற்கு முன்னதாக விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக இவர் மிரட்டி இருப்பார். இதனைத் தொடர்ந்து இவருக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் இவர் தனது சம்பளத்தையும் பல கோடி ரூபாய் உயர்த்தியுள்ளார்.
இந்நிலையில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி தனக்கு குடிப்பழக்கம் இருப்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய இவர், குடிப்பது நல்ல பழக்கம் இல்லை. ஆனால் எனக்கு குடிப்பழக்கம் உண்டு. கருத்தை பாருங்கள் கருத்து சொன்னவர்களை பார்க்காதீர்கள். கருத்து தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் அவ்வளவுதான். யாரும் யாரிடமும் தோல்வி அடையவில்லை வெற்றி பெறவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.