Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எனக்கு இந்த தின்பண்டம் பிடிக்கவில்லை” காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் பரபரப்பு சம்பவம்…!!

கணவர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் தறி தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமண சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரீத்தி, அருணி, குகன் ஆகிய 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டின் படுக்கை அறையில் சரண்யா சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமணனை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது லட்சுமணன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மது போதையில் லட்சுமணன் தின்பண்டத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த தின்பண்டம் சரண்யாவிற்கு பிடிக்காததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த லட்சுமணன் சரண்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு ஒன்றும் தெரியாதது போல வீட்டிற்கு வந்து சரண்யா எப்படி இறந்தார் என தெரியவில்லை என்று லட்சுமணன் நாடகமாடியது தெரியவந்துள்ளது.

Categories

Tech |