பெண் பிடிக்காததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவிடையார்பட்டி கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித்தொழிலாளியானா நாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நகராஜிக்கு பெற்றோர் திருமணம் செய்வதற்காக பெண் பார்க்க அழைத்து சென்றுள்ளனர். ஆனால் நாகராஜன் அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.