ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்னகாமன்பட்டியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தீயணைப்பு துறை பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் கரூரில் இருக்கும் தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில் ராஜேஷ் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்ட ராஜேஷ் தனது அண்ணன் ரஞ்சித் என்பவரை வரவழைத்துள்ளார். பின்னர் எனக்கு இந்த பணி பிடிக்கவில்லை என ராஜேஷ் கூறியுள்ளார். மேலும் பணி வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் சாத்தூர் ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளம் அருகே சென்று மதுரை நோக்கி செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராஜேஷின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.