Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு இப்படியொரு பிரச்சனை இருக்கிறது” பிரபல நடிகை ஓபன் டாக்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய  உடல் நலப் பிரச்சினை குறித்து ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் படு அக்டிவ் ஆக இருப்பார்‌. இந்நிலையில் நடிகர் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது சாந்தனு ஹரிஹாரா என்பவரை காதலித்து வருகிறார்.

இதனையடுத்து நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு இருக்கும் உடல்நலப் பிரச்சனை குறித்து ரசிகர்களிடம் தற்போது ஓப்பனாக கூறியுள்ளார். அதாவது ஸ்ருதி பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த ஹார்மோன் பிரச்சனை பெண்களுக்கு இருந்தால் குறிப்பாக மாதவிடாய் சீராக இருக்காது. இந்த பிரச்சனை காரணமாக நடிகை ஸ்ருதிஹாசன் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதுடன் நன்றாக ஓய்வு எடுக்கிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ஹார்மோன் பிரச்சனை இருப்பதால் ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |