Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு இப்பவே பணம் வேணும்….. அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளியை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான தியாகு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தியாகு தச்சநல்லூர் பஜாரில் நின்று கொண்டிருந்தபோது சத்திரம் பகுதியில் வசிக்கும் அருண் என்பவர் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து தியாகு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |