Categories
சினிமா

எனக்கு இவ்வளவு சம்பளம் வேணும்….. டக்குன்னு கேட்ட நயந்தாரா…. மிரண்டுபோன இயக்குனர்…..!!!!!!

தென் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. தற்போது இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதிகபட்சமாக சம்பளம் வாங்கும் நடிகையாக இவர் இருக்கிறார். அதாவது ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவரைப் பார்த்து மற்ற நடிகைகள் அனைவரும் பொறாமைபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர் தன்னுடைய சம்பளத்தை மேலும் அதிகமாக உயர்த்தி இருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் ரவிச் சந்திரன், நயன்தாராவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். அந்தப் படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு சமூக கருத்து திரைப்படம் ஆகும். இந்த மாதிரியான கதைகளில் நடிப்பதில் நயன்தாரா திறமையானவர் ஆவார் .

முன்பே அவர் இது போன்று கதையின் நாயகியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். இதனால் இந்த படத்திற்கும் அவர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் அதிகபட்ச சம்பளமாக 10 கோடி கேட்டுள்ளார். ரவிச்சந்திரன் இயக்குனர் அட்லிக்கு மிக நெருக்கமானவர். அதன்படி நயன்தாராவுக்கும் இவர் பழக்கம்தான். அந்நட்பின் அடிப்படையில்தான் இவர் நயன்தாராவை வைத்து படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் இவர் ஒரேயடியாக தனது சம்பளத்தை இவ்வளவு கோடி அதிகப்படுத்தி இருப்பது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. முன்பே நயன்தாரா கோலிவுட், பாலிவுட் என்று கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துக்கொண்டு அதிக லாபம் பார்த்து வருகிறார். மேலும் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் நிலையில், இவ்வளவு பணம் வாங்கி அவர் என்ன செய்வார் என்று ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Categories

Tech |