தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே புதுக்கிராமம் பகுதியில் சிங்கராயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சிங்கராயன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிங்கராயனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிங்கராயன் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்