சட்டசபையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரின் பதில் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, இந்த அரசு மிகச் சிறப்பாக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நிதித்துறை தான். இந்த நிதித் துறையை தனக்கு தெரிந்த பல திறமைகளுடன் லாவகமாக கையாண்டு வருகிறார் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவரை நான் மனதார பாராட்டுகிறேன். அதே போல் தான் நம்முடைய வேளாண்மைத் துறை அமைச்சர் அவரை “வேங்கையின் மைந்தன்” என சிறப்பு பெயர் கொண்டு பலரும் அழைப்பதுண்டு.
அவர் தற்போது விவசாயிகளின் மைந்தன்னாகவும் உள்ளார். அதேபோல் இலங்கை தமிழர்கள் தற்போது பல துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் நாங்கள் தொடர்பு கொண்டு இதனை எவ்வாறு கையாள வேண்டும் என பேசி வருகிறோம். இந்தியாவில் நம்பர் ஒன் முதலமைச்சர் என பெயர் பெறுவது எனக்கு பெருமை தான். ஆனால் அதை விட எனக்கு மகிழ்ச்சி என்னவென்றால் தமிழகம்தான் நம்பர் ஒன் என பெயர் வாங்குவது தான்.” என அவர் கூறியுள்ளார்.