நடிகர் nanaa படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை தனுஸ்ரீ தத்தா 2018-ல் #MeToo மூலம் குற்றம் சாட்டை இருந்தார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு ஏதாவது ஆனால் மீடு விவகாரத்தில் தான் குற்றம் சாட்டிய நானா படேகர், அவரது பாலிவுட் மாபியா நண்பர்கள் தான் காரணம். நானா படேகர் மற்றும் பாலிவுட் மாபியா தன்னை துன்புறுத்துகின்றனர். திரை துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தன் மீது பொய்யான செய்திகளை பரப்புகின்றனர்.
அவர்களின் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள், அவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்து, அவர்களை கொடூரமான பழிவாங்குங்கள். என்னைப் பற்றியும் என் நபர்களைப் பற்றியும் போலிச் செய்திகளைப் பரப்பிய அனைத்துத்துறை பத்திரிகையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் என்னை மிகவும் துன்புறுத்தினார்கள். அவர்களின் வாழ்க்கை நிச்சயம் ஒருநாள் நரகமாகும். சட்டமும் நீதியும் என்னைத் தவறவிட்டிருக்கலாம் ஆனால் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஜெய் ஹிந்த்… விடைபெறுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
என அவர் பதிவிட்டுள்ளார்.