Categories
அரசியல் தேசிய செய்திகள்

எனக்கு எதிராக பேசுபவர்களை…. சிவசேனா கட்சி ஊக்குவிக்கிறது…. அமைச்சர் நாராயணன் ரானே…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நாராயணன் ரானே மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறித்து “கண்ணத்தில் அறைந்திருப்பேன்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரானேவை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நாராயணன் ரானே செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தனக்கு எதிராக பேசுபவர்களை சிவசேனா கட்சி ஊக்குவித்து வருகிறது. மக்கள் ஆசீர்வாதம் யாத்திரை நிகழ்ச்சியில் கெட்ட சகுணம் போல எனக்கு ஒரு நிகழ்வு நடைபெற்றது.
இங்கிருக்கும் சில அமைச்சர்கள் தங்களை குடியரசுத் தலைவர் போல நினைத்துக்கொண்டு என்னை கைது செய்ய உத்தரவிடுகிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் என்னை வீழ்த்த முடியாது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மத்திய பாஜக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வேன். இந்த பணியை செய்வதில் எந்த ஒரு இடையூறு வந்தாலும் அதைச் செய்து முடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |