Categories
மாநில செய்திகள்

எனக்கு எந்த அதிகார ஆசையும் இல்லை….. “இபிஎஸ் உடன் பேச நான் தயார்”….. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!!!

எடப்பாடி பழனிச்சாமி உடன் பேசுவதற்கு நான் தயார் என ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “அதிமுக தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறுஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். திடீரென ஒற்றைத்தலைமை என்ற பேச்சு ஏன் வந்தது என எனக்கு தெரியவில்லை

எந்த ஒரு அதிகார ஆசையும் கொண்டவன் நான் அல்ல. அதிமுக தொண்டர்களிடம் இருந்து என்னை ஓரங்கட்ட முடியாது. பொதுக் குழு கூடுவதற்கு முன்பாக நாங்கள் இணைந்து ஒரு முடிவெடுத்து விட்டால் பொதுக்குழுவில் எந்தப் பிரச்சினையும் வராது. எந்த காரணத்திற்காகவும் கட்சி இரண்டாக உடைய கூடாது. ஈபிஎஸ் உடன் பேச நான் தயார். நானும் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து பேசி ஒற்றை தலைமை பற்றி பேசியவர்களை கண்டிக்க வேண்டும்” என்றார்.

Categories

Tech |