9 வயது சிறுமிக்கு பேய் பிடித்ததாக கூறி பேயை விரட்டுகிறேன் என்ற பெயரில் 5 மணிநேரம் அந்த சிறுமியை பிரம்பால் அடித்து சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கதுபொட பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா என்ற 9 வயது சிறுமிக்கு பேய் பிடித்து உள்ளது என்று அவரின் தாய் அவரை வீட்டிற்கு அருகில் உள்ள மந்திரவாதி இடம் அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு முதலாவதாக எண்ணி பூசம் பூஜை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அந்த சிறுமியை பிடித்துள்ள பேய் விரட்டுகிறேன் என்று கூறி பிரம்பு உடையும் வரை 9 வயது சிறுமியை மாலை 6 வரை தாக்கியுள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து 5 மணி நேரம் தாக்கப்பட்ட சிறுமி மயக்கமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனை அழைத்து சென்றபோது சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனக்கு எந்த பிரச்சினை இல்லை எனவும், என்னை அடிக்க வேண்டாம் என அவர் கூச்சலிட்டு அழுதபோதும் உயிரிழக்கும் வரை அடித்துள்ளார். சிறுமியை தாக்கிய பிரம்புகளின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் தாய் மற்றும் பெண் பூசாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.