Categories
சினிமா

“எனக்கு என் அம்மாவை பிடிக்கும்”…. உருக்கமாக பேசிய டிரைக்டர் ஸ்ரீ கார்த்திக்….!!!!

அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “கணம்”. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகன் ஆக நடிக்க, அவருக்கு அம்மாவாக நடிகை அமலா நடித்து இருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ்பிஜாய் இசையமைத்து இருக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் பேட்டி அளித்தார்.

அப்போது கணம் படம் தொடர்பாகவும், அவரின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, “எனக்கு டைம் டிராவல் படம் பண்ணுவது குறிக்கோள் கிடையாது. என் அம்மா உயிரிழந்த சில மாதங்களுக்கு பின் நான் எழுத ஆரம்பித்தேன். முதலாவதாக எனக்கு பிடித்ததை எழுத தொடங்கினேன். எனக்கு என் அம்மாவை பிடிக்கும். என் அம்மாவை திரும்பிபார்த்தால் எப்படி இருக்கும். அதனை தான் இந்த படம் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறேன்” என அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |