அரக்கோணம் 2இளைஞர்கள் படுகொலையையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய இளம் பத்திரிக்கையாளர் விக்ரமன், நான் ஊடகத்தில் இருந்தவன், எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். தைரியம் இருக்கிறதா ? அடிதடி செய்வது எல்லாரும் செய்யலாம்…. அறிவு இல்லாதவன் தான் அடிதடி வேலையில் இறங்குவாம். அறிவு இருப்பவன் விவாதத்திற்கு கூப்பிடுவான்…. புத்தனோட வாரிசு விவாதிக்க தான் கூப்பிடுவோம். நான் இங்கே ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன்.
நான் அண்ணனுடைய வாரிசு நான்…. அண்ணனுடைய வளர்ப்பு நான்…. விவாதிக்க தயாரா ? அன்புமணி ராமதாஸ் அவர்களே என்னுடன் நேரடியாக விவாதிப்பதற்கு தயாரா ? யாருமே இல்லை அதுதான் உண்மை. அங்கு எழுத படிக்க தெரிந்தவனே கிடையாது. அந்த மக்களை வஞ்சித்து வைத்திருக்கிறீர்கள்.
கூலி தொழிலாளர்கள் தானே அவர்களும், 100 நாள் வேலைக்கு போகப் கூடியவர்கள் தானே அவர்கள்… அவர்களை படிக்க விடாமல், அவர்களுக்கு ஜாதி வெறியை ஊட்டி, அவர்களை எதற்கு இப்படி நாசம் செய்கிறீர்கள் ? அந்த சமுதாய மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள். மருத்துவ படிப்பில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வஞ்சிக்கப்பட்ட போது, முதல் குரல் கொடுத்தது யார் தெரியுமா ? அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள்….
வேறு யாருமே கண்டுகிட்டவில்லை. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் முதலில் அண்ணன்தான் குரல் கொடுத்தார். ஸ்காலர்ஷிப் போன போது யார் குரல் கொடுத்தது ? அண்ணன் தான் குரல் கொடுத்தார். இதையெல்லாம் விட ஒன்று சொல்லட்டுமா….. மண்டல் குழு, மண்டல் கமிஷன்… 1992இல் மண்டல் கமிஷன் போட்டு தான் மத்திய அரசு கல்வி வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார்கள்.
அந்த மண்டல் கமிஷனில் இரவு பகலாக கடைசி வரை நாடு முழுவதும் சுற்றித் திரிந்து, தன்னையே அர்ப்பணித்து ஸ்ரீ நாயக் என்ற ஒரு நண்பர் வேலை செய்தார். அந்த நண்பர் ஒரு தலித். மண்டல் கமிஷனை அமுல் படுத்துவதற்கு…. உறுதுணையாக இருந்தது திரு. ராமதாஸ் பஸ்வான் அவர்கள். சமூகநீதித் துறை அமைச்சராக இருந்தார், அவரும் ஒரு தலித். பிற்படுத்தப்பட்ட…
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு என்ற உரிமையை பெற்றுக் கொடுத்தது ஒரு தலித் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே மாதிரிதான் அண்ணன் அவர்கள் அவர்களுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். தம்பி சூர்யா மற்றும் அர்ஜூனன் அவர்களுக்கு என்னுடைய வீர வணக்கத்தை சொல்லிக் கொள்கிறேன் என விக்ரமன் தெரிவித்தார்.