எனக்கு ஏன் சல்யூட் அடிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரியிடம் சுரேஷ்கோபி கேட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பாஜக மாநிலங்களவை எம்பியாக இருப்பவர் நடிகர் சுரேஷ்கோபி, திருச்சூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட சென்றிருந்தபோது ஒரு ஜீப்பில் அமர்ந்திருந்த போலீஸ் சுரேஷ்கோபியை கண்டுகொள்ளாமல் இருந்தார், உடனே அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரிடம் நான் ஒன்றும், மேயரில்லை எம்பி, எனக்கு ஏன் சல்யூட் வைக்கவில்லை என்று அவரிடம் கூறினார். இதுதொடர்பான வீடியோவானது வெளியாகி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் தான் கேட்டதை நியாயப்படுத்தும் விதமாக சுரேஷ் கோபி தெரிவித்துள்ளதாவது: ” நான் அந்த சப்-இன்ஸ்பெக்டரை சார் என்று மரியாதையாக அழைத்து, எம்பியான எனக்கு ஏன் சல்யூட் வைக்கவில்லை? என்று மென்மையாக தான் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தங்கம் கூறியுள்ளதாவது: சட்டபூர்வமாக தகுதி வாய்ந்தவர்களுக்கு தான் சல்யூட் வைத்து வைக்க வேண்டும் என்பது போலீஸின் வழக்கம். எம்பி, எம்எல்ஏக்கள் அந்தப் பட்டியலின் கீழ் வரமாட்டார்கள். இருப்பினும் ஒரு மரியாதை நிமிர்த்தமாக தான் அவர்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத்தி வருகிறோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தற்போது போலீஸ் அதிகாரியிடம் சுரேஷ்கோபி சல்யூட் கேட்ட விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.