நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என சீமான் அறிவித்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கோவையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசியதில் , குடியுரிமை இருக்கா என்று அதிகாரிகள் கேட்டு வந்தார்கள் என்றால் நீங்கள் 50 பேர் சேர்ந்து அதிகாரிகள் மடக்கி உங்களின் குடியுரிமையை காட்டுங்கள் என்று கேளுங்கள் என்று தெரிவித்த சீமான் என்னிடம் அதிகாரிகள் கேட்கும் பட்சத்தில் நான் இந்திய குடிமகனே கிடையாது , இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என்று சொல்வதாக அறிவித்தார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியது கொடுமை என்று விமர்சித்த சீமான் நாங்கள் உங்களுக்காக தொடர்ந்து போராடியும் நீங்கள் எங்களுக்கு வாக்கு செலுத்த மறுப்பதாக வேதனை தெரிவித்தார்.