முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் 97வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிறைய பேர் நம்ம ஆபீஸ்க்கு வருவாங்க, நிறைய பேர் வந்து பணம் கொடுப்பாங்க, இதுபோன்று ஒன்றிரண்டு சம்பவங்கள் தினமும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருக்கும். போன வாரம் கூட கரூர்ல ஒரு ஐஸ்க்ரீம் கம்பெனி வைத்திருக்கிறவர் சாதாரண ஒரு மிடில்கிளாஸ் ஆளு…
ஒரு பத்து லட்ச ரூபாய் காசோலை கொண்டு வந்தாங்க, கட்சிக்கு நன்கொடை கொடுக்க வேண்டும் வாங்கிகோங்க. அவரை பார்த்துவிட்டு நான் வாங்க மறுத்தேன்… 10 லட்சம் நீங்கள் கொடுக்குறீர்களே…. உங்களுக்கு அந்த அளவுக்கு வசதி இருக்கா ? யோசிச்சி தான் கொடுக்குறீங்களா என்று கேட்டேன். அதெல்லாம் விடுங்க சார்…
6 ஊழியர்கள் இருக்கிறார்கள், ஐஸ்கிரீம் கம்பெனி நடத்துகிறேன். எனக்கு கடவுள் மோடி, அவருக்கு இந்த பணம் தேவைப்படுகிறது. அதனால் நீங்கள் இதை வாங்கி கொள்ள வேண்டும், இதே போல் நிறைய நெகிழ்வான தருணங்கள்…. நீங்கள் அலுவலகத்திற்கு வந்தால் வாரத்துக்கு 5, 6 இதே மாதிரி நடந்துகிட்டே இருக்கும். உங்களுக்கு சோர்வு உழைப்பு எதுவுமே தெரியாது, உங்களுக்கு அந்த சோம்பலே வராது என தெரிவித்தார்.