Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எனக்கு கல்யாணம் பண்ண புடிக்கல” இளம்பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிழக்கு 4-வது  வீதி பகுதியில் ஜெயகோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கோமதி திருமணத்தில் விருப்பம் இல்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால்  மன உளைச்சலில் இருந்த கோமதி நேற்று வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |