தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஷாலுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாக இருந்த நிலையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நின்றது. பொது நிகழ்ச்சிக்கு செல்லும் இடங்களில் அனைவரும் விஷால் திருமணம் எப்போது என்ற கேள்வியை மட்டுமே எழுப்புகின்றனர். இந்நிலையில் விஷால் தற்போது நாடோடிகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை அபிநயாவை திருமணம் செய்ய உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வந்தது.
இது தொடர்பாக இரு தரப்பினரும் இன்னும் மறுப்பு கூறவில்லை. இதனிடையே ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், எனக்கு காதலி இருக்கிறார்,விரைவில் அவரை அறிமுகப்படுத்துவேன் என்றும் தன் திருமணம் குறித்து தெரிவிப்பேன் எனவும் விஷால் கூறியுள்ளார்.