“பிக்பாஸ்” ஷோவின் பிரோமோவில் நடிகை வனிதா பிரச்சனை செய்வதுபோல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் போட்டியாளர்களை தான் தேர்வு செய்துள்ளனர். அதிலும் வனிதாவை சொல்லவே தேவையில்லை. தற்போது வெளியாகிவுள்ள பிக்பாஸ் ப்ரோமோவில் வனிதா எனக்கு காபி வேண்டும் என கோபமாக கேட்பதுபோல் வெளியாகியுள்ளது.
வனிதாவால் எப்போதும் பிரச்சினையாகத்தான் இருக்கிறார் என அனிதா மற்றும் பாலாஜி கூறுகிறார்கள். அதற்கு வனிதா அது உங்களுடைய பிரச்சனை என்னுடைய பிரச்சனை அல்ல என்று கூறுகிறார். வீட்டிலுள்ள டீ பாக்கெட்டுக்களை எடுத்து தனது சூட்கேசில் வைத்து கொண்டு எனக்கு காப்பி கொடுங்கள் இல்லையென்றால் யாரும் குடிக்காமல் சாவுகள் என்று கூறுவது போல் புரோமோ வெளியானது.