Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எனக்கு குடிக்க பணம் கொடு… “தாய் தராததால் ஆத்திரத்தில்”.. மகன் செய்த கொடூரம்..!!

குடிபோதையில் மகன் தாயை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கன்னிமார் கூட்டத்தில் வசித்து வருபவர் மாடசாமி. இவரது மனைவி மூக்கம்மாள். கணவர் மாடசாமி இறந்த பிறகு மூக்கம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறாள். இவர்களின் மகன் கணேசன் கோவில்பட்டியில் வசித்து வருகின்றார். கணேசன் கோவில்பட்டியிலிருந்து தனது தாய் மூக்கம்மாளை பார்ப்பதற்கு அடிக்கடி வந்து செல்வதாக  கூறப்படுகிறது.

இந்நிலையில் கணேசன் குடிபோதையில் மூக்கம்மாள் வீட்டிற்கு வந்தார் . அப்போது தாய் மூக்கம்மாளிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணேசன் தாய் மூக்கம்மாளை கீழே தள்ளிவிட்டார். இதனால் கீழே விழுந்த மூக்கம்மாள் மயங்கிய நிலையில் உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இந்நிலையில் மூக்கம்மாள் வெகுநேரம் ஆகி வெளியே வராததை கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்பொழுது மூக்கம்மாள் இறந்து கிடந்ததாக தெரியவந்தது.

உடனே அங்குள்ள மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த போலீசார் மூக்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து  மூக்கம்மாளை கொலை செய்த அவரது மகன் கணேசனை போலீசார் பல இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.   இந்நிலையில் அவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |