Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு கூடுகிறது கூட்டம்… அதைப் பார்த்து வயிறு எரிகிறதோ?… கமல்ஹாசன் சாடல்…!!!

தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான மனநிலையில் மையத்துக்கு மக்கள் கூடுவதை பார்த்து வயிறு எரிகிறதா? என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன்படி மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட பிறகு, தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை அவர் பகிர்ந்து வருகிறார்.

அதன்படி அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜெகஜீவன் அவென்யூவில் ஜீவ நாடியான நீர்நிலைகளும், ஆலிவ் ரிட்லி ஆமைகள் வாழும் கடற்கரை பகுதிகளும் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்த உரையுடன் எனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டேன். #ஆயிரம் கைகள் கூடட்டும், #சீரமைப்பும் தமிழகத்தை” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், “உண்ணவும் அருந்தவும் கொடுத்து ஊர்திகளின் அழைத்தாலும் வராத கூட்டம், ஊழலுக்கு எதிரான மனநிலையில் மையத்துக்கு கூடுவதை பார்த்து வயிறு எரிகிறதா?அதனால்தான் செஞ்சியில் பேச நமக்கு தடைகள் வருகிறதோ? எதுவரினும் நில்வோம், அஞ்சோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |