தனுஷிடம் ரஜினி ஐஸ்வர்யாவின் வாழ்க்கை குறித்து பேசியதற்கு தனுஷ், எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. இவர்கள் 2002ஆம் ஆண்டு காதலில் விழுந்தனர். பிறகு 2004 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இருவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் சேர்வதாக தெரியவில்லை. இச்செய்தியை அறிந்த ரஜினி, ஐஸ்வர்யாவின் மீது கொண்ட கோபத்தினால் ஐஸ்வர்யா தனுஷ் இடம் சேர்ந்து வாழ்வதாக மனம் மாறினார். ஆனால் தனுஷ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
தனுஷ், உன்னால் மனதை உடனே மாற்றிக்கொண்டது போல் என்னால் மாற்றி கொள்ளமுடியாது. எனக்கு அதற்கு சிறிது காலம் தேவைப்படும் என ஐஸ்வர்யாவிடம் கூறியதாக சொல்லப்படுகின்றது. ஆனால் தனுஷ் தன் தந்தையிடம் என்னால் இனி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறியுள்ளதாக கூறப்படுகின்றது. ரஜினி தனுஷிடம் இதுபற்றி பேசிய போது எனக்கு சிறிது காலம் தேவைப்படும் என கூறியிருக்கின்றார். தனுஷின் முடிவிற்காக ரஜினி பொறுமையாக காத்திருக்கின்றார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதற்கு முன்பு பல மாதங்களாக பேசாமல் இருந்ததுதான் இப்படிப்பட்ட பிரிவுக்கு முக்கிய காரணம் என சிலர் கூறிகின்றனர்.