சின்னத்திரை நடிகை ஆன நடிகை திவ்யாவை சின்னத்திரை நடிகர் அர்னவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு இடையே கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் அர்னவை போலீசார் விசாரணைக்கு ஆஜராகும் படி தெரிவித்தும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். அதனால் இன்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் கண்ணில் காயம் ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் நடிகர் அர்னவ் கால அவகாசம் கேட்டு மனு அளித்துள்ளார். இதனை அடுத்து 18ம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் திறப்பில் மனுவில் கூறப்பட்டுள்ளது