Categories
சென்னை மாநில செய்திகள்

“எனக்கு கொஞ்சம் பிரியாணி கொடு”…. பிரியாணி கேட்ட மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவர்…. பரபரப்பு….!!!!

சென்னையில் பிரியாணியால் வந்த சண்டையில் மனைவியை கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் கருணாகரன் (75) மற்றும் பத்மாவதி (65) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கருணாகரன் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கருணாகரன் பத்மாவதி தம்பதியினர் தனிமையின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட சில வருடங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது தனியாக வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு கருணாகரன் வீட்டிற்கு பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவரின் மனைவி பத்மாவதி தனக்கும் பிரியாணி வேண்டும் என கேட்டுள்ளார்.அதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபமடைந்த கருணாகரன் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது மனைவி பத்மாவதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே பத்மாவதி ஓடிவந்து கணவரை கட்டிப்பிடித்ததில் கருணாகரனுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கருணாகரன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |