Categories
இந்திய சினிமா சினிமா

எனக்கு கொரோனா இருக்கு… பிறந்தநாள் வேண்டாம்…. முடிவெடுத்த பிரபல பாடகர்….!!

பிரபல பாடகருக்கு  கொரோனா தொற்று  உள்ளதாக  தகவல் வெளிவந்துள்ளது. 

இந்தி திரை உலகில்  பிரபல பாடகர் ஆக இருப்பவர் பாடகர் குமார்சானு.   இவர் இந்தி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,மராத்தி,  போஜ்பூரி என பல மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி மிகவும் புகழ்பெற்றவர்.  இந்தியில் வெற்றி பெற்ற சாஜன் என்ற படத்தை தமிழில் டப்பிங் செய்தனர். இதில் அவரே தமிழில்  பாடினார் மற்றும்  2009-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்ததுள்ளது.

இந்நிலையில் 62 வயதான பாடகர் குமார் சானுவுக்கு  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது  பிறகு பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.  இதையடுத்து  குமார் சானுவின்  முகநூல் பக்கத்தில் துரதிர்ஷ்ட வசமாக  கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர் குணமடைய  பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும்  குறிப்பிடப்படுகின்றது.

ஆகவே வருகின்ற  30-ஆம் தேதி  தனது மனைவியின் பிறந்தநாளை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  குடும்பத்துடன் கொண்டாட திட்டமிட்டு இருந்தனர். இப்பொழுது அந்த பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

Categories

Tech |