தனிமைப்படுத்தப்பட்டவர் தப்பி ஓடியதால் அவரை துரத்தித்பிடித்த போலீசார் கை கால்களைக் கட்டி மருத்துவ ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
கேரளாவில் பந்ததுட்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முககவசத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு ஒருவர் வந்து இருக்கின்றார். அப்போது அவரை விசாரணை செய்த போலீசாரை எதிர்த்துப் பேசிய அவர் தனக்கு கொரோனோ இல்லை என சவுதியில் கொடுத்த பரிசோதனை சான்றிதழ் வீட்டில் உள்ளது எனவும் இதனால் நான் முககவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரின் பேச்சை சந்தேகித்த போலீசார் அந்த நபரிடம் வீட்டு எண்ணை வாங்கி அவரின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.
அப்போது அவரின் மனைவி 3 நாட்களுக்கு முன்னர்தான் அவர் சவுதியில் இருந்து வந்தார் எனவும் அவரை தனிமையில் வைத்துக் கொண்டிருந்ததாகவும் கூறினார். தற்போது அவர் என்னிடம் வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியே சென்று விட்டதாக போலீசாரிடம் அந்நபரின் மனைவி கூறினார். இதன்பிறகு தப்பி ஓடிய அந்நபரை திரைப்பட காட்சியில் வருவதை போல் விரட்டி பிடித்து மருத்துவ ஊழியர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதன் பிறகு அவரின் கை, கால்களை கட்டி மருத்துவமனையின் ஸ்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். இந்த சம்பவம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.