Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு கோபம் வந்தால் அடித்து விடுவேன்” பிரபல நடிகையின் பரபரப்பு பேச்சு…. ரசிகர்கள் ஷாக்….!!!

பிரபல நடிகை தன்னை பற்றி தவறாக பேசியவர்களை அடித்து இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ரெஜினா வலம் வருகிறார். இவர் தமிழில் சக்ரா, சரவணன் இருக்க பயமேன், மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கண்ட நாள் முதல், நிர்ணயம், அழகிய அசுரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மிக அதிகமாக கோபப்படுவார் என்றும், கோபத்தில் மற்றவர்களை அடித்து விடுவார் எனவும் ரெஜினாவுக்கு நெருக்கமானவர்கள் கூறி வந்தனர். இது தொடர்பாக ரெஜினா விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது தைரியம் என்பது வெளியில் இருந்து வருவது கிடையாது. அது நமக்குள் தான் இருக்கிறது என்பதை என்னுடைய பள்ளி நாட்களிலேயே நான் புரிந்து கொண்டேன். நான் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக சிலர் கூறினாலும், எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு கோபம் வந்தால் என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. நான் பள்ளி, கல்லூரி மற்றும் சினிமா துறையில் வந்த பிறகும் என்னை பற்றி தவறாக பேசியவர்களை அடித்து இருக்கிறேன். என்னுடைய கோபத்திற்கு பின்னால் அகம்பாவம் இருக்காது. என்னுடைய கோபத்திற்கு பின்னால் காரணம் மட்டும் தான் இருக்கும் என கூறியுள்ளார்.

Categories

Tech |