தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக மனைவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஜயலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் மல்லிகா சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். இதனை அடுத்து மல்லிகாவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது விஜயலிங்கம் இறந்துவிட்டதாக அவரின் உறவினர்கள் மல்லிகாவிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகமடைந்த மல்லிகா தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக ராணிப்பேட்டை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.