இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி ராஜீவ் காந்தி நகரில் நல்லசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஆறுமுகம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக நல்லசிவம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.