பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள உமாரெட்டியூரில் சுந்தரராஜன்-ஜெயா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கோகிலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோகிலாவிற்கும் விவசாயியான வேல்முருகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு மதுவதனி என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபத்தில் கோகிலா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி கணவர் வீட்டிற்கு அனுப்பி வைப்பதும் வழக்கமாக இருந்தது. நேற்று முன்தினம் தம்பதியினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் கோகிலா விஷம் குடித்து மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோகிலா பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து கோகிலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜெயா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.