தம்பி அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்திக்கோவில் பகுதியில் விவசாயியான வடிவேலு(76) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிக்கண்ணு(55) என்ற மனைவி இருந்துள்ளார். இவரது பெரியப்பா சின்னையாவின் மகன் குணசேகரன்(49) என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்த குணசேகரனுக்கு தம்பி என்ற முறையில் மாரிக்கண்ணு தினமும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். நேற்று காலை மாரிக்கண்ணு வழக்கம் போல சாப்பாடு கொடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது எனக்கு தினமும் சாப்பாட்டில் செய்வினை செய்து கொடுக்கிறாயா? எனக்கு கூறி குணசேகரன் கையில் இருந்த கத்தியால் பெண்ணின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மாரிக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிக்கண்ணுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தப்பி ஓடிய குணசேகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.