தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள இறையன்பு மக்கள் நலப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். மேலும் கொரோனாவை தடுப்பது குறித்த நடவடிக்கைகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கொரோனா தொடர்பாக பல மாவட்டங்களில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு செய்ய இருக்கிறார். இதையடுத்து தான் ஆய்வு செய்ய வரும்போது மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவு ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், எனக்கு இரவு நேரங்களில் எனக்கு எளிய உணவும் மதியம் இரண்டு காய்கறிகளுடன் கூடிய சைவ உணவும் போதும்” என்று தெரிவித்துள்ளார்.