தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும் நேற்றைய தினம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் எம் ஆர் விஜயபாஸ்கர் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி அவர் தனது சொந்த வீடுகூட கிடையாது என்று கூறியுள்ளார் மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மேலும் எந்த ஆவணமும் கிடைக்கவில்லை எடுக்கப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது என்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். எனக்கு சொந்த வீடுகூட கிடையாது என்றும் பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன் என்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் நேற்றைய தினம் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.