வேன் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அல்லாலி கவுண்டனூரில் வேன் ஓட்டுனரான பாலமுருகன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது சிறுமியை திருமணம் செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் பாலமுருகன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று குடிபோதையில் நிலுவையில் இருக்கும் வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடுமென புலம்பியுள்ளார்.
இதனை அடுத்து வீட்டிற்கு சென்ற பாலமுருகன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலமுருகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.