ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காய்பட்டணம் அருகில் கீழ்குளம் செந்தரை பகுதியில் அஜிமோன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தாயும் தந்தையும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதன் காரணமாக அஜிமோன் தன்னுடைய பாட்டி செல்லாச்சியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜிமோன் விடுமுறைக்காக தன்னுடைய பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் ஆகாததை எண்ணி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அஜிமோன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லாச்சி கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்த அஜிமோனை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜிமோன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து செல்லாச்சி புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.